Blogger templates

புதன், 30 செப்டம்பர், 2020

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

 


கட‌ந்த, 2019-2020 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 30 என இருந்த நிலையில் வருமான வரி தாக்கல் செய்ய நவம்பர் 30 கடைசி நாளாக அறிவித்து வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. 

வியாழன், 24 செப்டம்பர், 2020

Flash News : 10 , 12 ஆம் வகுப்பு விருப்பமுள்ள மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிகளுக்கு வருவதற்கான நெறிமுறை அரசாணை தமிழக அரசு வெளியீடு. ( GO NO : 523 , Date : 24.09.2020 )

50% ஆசிரியர்களுடன் அக்.1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி அரசு அனுமதி.

 

 https://drive.google.com/file/d/1mv6s83PA5-FKaEmyPrL7NX8Vbj7V9Hj-/view?usp=drivesdk

NEET - 70 மதிப்பெண் வரை இந்தாண்டு கட்-ஆப் உயரும்.

 நீட் தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்ததால் 70 மதிப்பெண் வரை கட்-ஆப் உயரும் என கல்வியாளர்கள் கருத்து ( பத்திரிகை செய்தி) 


மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பெண் கல்வி ஊக்குவிப்புத் தொகை (MBC Rural Girls Incentive Scheme) வழங்குவதற்கான விதிமுறைகள்..

 


மாணவர் சேர்க்கை, ஆசிரியர் காலியிடம் பட்டியல் தாக்கல் செய்ய உத்தரவு.


 

 எல்.கே.ஜி., முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை நிலவரம் உட்பட, 20 வகை பணிகளுக்கான புள்ளி விபர பட்டியலை, நாளைக்குள் தாக்கல் செய்யும் படி, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.


பள்ளிகள், கல்லுாரிகள் திறக்கப்படவில்லை என்றாலும், மாணவர் சேர்க்கை, கல்வி கட்டணம் வசூலிப்பது, ஆன்லைனில் பாடங்கள் நடத்துவது போன்ற நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. 

நடவடிக்கை


அதேபோல, அரசு பள்ளிகளின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இடமாறுதல் வழங்குவது போன்றவையும் நடக்கின்றன. 


இந்த வரிசையில், நடப்பு கல்வி ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்தும், 28ம் தேதி, மாநில அளவில் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இந்நிலையில், பள்ளிக் கல்வியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து, மாவட்ட கல்வி அதிகாரி களிடம் தகவல்களை திரட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


எனவே, ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட, வட்டார கல்வி அலுவலர்கள், தங்களின் எல்லைக்கு உட்பட்ட பள்ளிகளில், எல்.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரை சேர்த்த, புதிய மாணவர்களின் எண்ணிக்கை குறித்த, புள்ளி விபரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

சுற்றறிக்கை


அதேபோல, ஆசிரியர் காலியிடங்கள், இடிக்க வேண்டிய கட்டடங்களின் நிலை, புதிதாக மழலையர் பள்ளிகள் உருவாக்குதல், அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புக்கு அனுமதி அளித்தல் போன்றவை உட்பட, 20 வகை விபரங்களை நாளைக்குள் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் பழனிச்சாமி ஆகியோர், இதற்கான சுற்றறிக்கை களை மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிஉள்ளனர்.

வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன்நிறைவு - அதிகாரிகள் தகவல்


       

 வருமான வரித்துறையில் கடந்த 2018-2019-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. ஆண்டுக்கு, ரூ.2½ லட்சம் உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமானவரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் என்பது, 2018-ம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது.



அபராதம் செலுத்தி, கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், மார்ச் 31-ந் தேதி உடன் முடிவடைந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக, இந்த அவகாசம் செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது வருகிற 30-ந் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள், கணக்கு தாக்கல் செய்யாதோர், செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேற்கண்ட தகவலை வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ள

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

EMIS இணையதளத்தில் மாணவர் சேர்க்கையினை பதிவேற்றம் செய்ய உத்தரவு

 புதியதாக சேர்ந்த மாணவர்கள் விவரங்களை விரைவாக EMIS இணையதளத்தில் பதிவு செய்ய பள்ளி கல்வி இயக்குநரகம் உத்தரவு




ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

10,906 காவலர் பணியிடங்கள்: தமிழக போலீஸ், சிறைத் துறை தேர்வு அறிவிப்பு

            சீருடைப் பணியில் இணைவதுதான் உங்கள் லட்சியமா? அப்படியெனில் இது உங்களுக்கான செய்திதான்! தமிழக போலீஸ் மற்றும் சிறைத் துறையில் 10,906 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. குறைந்த கல்வித் தகுதியில், உடல் திறன் மிக்கவர்கள் இதை சரியான வாய்ப்பாக பயன்படுத்தலாம்.

தமிழ்நாடு சீருடைத் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 10,906 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இந்தப் பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

tnusrb 2020: போலீஸ் தேர்வு விண்ணப்பிக்கும் தேதி

இந்தப் பணிகளுக்கு tnusrb.tn.gov.in என்கிற தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26 வரை விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 13-ல் எழுத்துத் தேர்வு நடக்கும்.

இது தொடர்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாடு காவல் துறை. சிறைத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளில் காலியாகவுள்ள 10.906 + 72 (Bl) காலிப்பணியிடங்களை பொதுத் தேர்வு மூலமாக நிரப்பிடுவதற்கான விளம்பரம் 17.09.2020 அன்று நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசின் விளம்பரத்தில் உள்ள விதிமுறைகள் மற்றும் விளக்கக் குறிப்புகளை படித்த பின்னர் இணையவழி விண்ணப்பத்தில் கோரியுள்ள விபரங்களை சரியாக நிரப்பி அத்துடன் தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

காலிப்பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 10906. துறை வாரியான காலிப்பணியிடங்கள் விவரம் வருமாறு: காவல்துறை: இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட/மாநகர ஆயுதப்படை) 3784 ( இதில் ஆண்கள் 685, பெண்கள் மற்றும் திருநங்ககைள் 3099), இரண்டாம் நிலை காவலர் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 6545 (ஆண்கள் மட்டுமே), சிறைக் காவலர் மொத்தம் 119 பணியிடங்கள், இதில் ஆண்கள் 112, பெண்கள் மற்றும் திருநங்கைகள் 7.

தீயணைப்பாளர் 456 (ஆண்கள் மட்டும்). இது தவிர 72 பின்னடைவு காலிப்பணியிடங்கள் (ஆயுதப்படை 62 பெண்கள்) மற்றும் சிறைத்துறை – 10 (பெண்கள்). இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 10,906 காவலர் பணியிடங்களுக்கும் ஊதிய விகிதம் ரூ.18200-52900 ஆகும்.

tnusrb 2020: விண்ணப்பிக்க தகுதி

விண்ணப்பம் செய்கிறவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரர் 10ம் வகுப்பில் தமிழை ஒரு மொழிப் பாடமாக படித்திருக்க வேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை தமிழ் தேர்வில் பணியில் சேர்ந்த நாளிலிருந்து இரண்டாண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதியினைப் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவர்.

விண்ணப்பிப்போருக்கு இருக்க வேண்டிய வயது வரம்பு பொதுப் போட்டி: 01.07.2020 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும் 24 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். ( அதாவது, 01.07.1996-லிருந்து 01.07.2002க்குள் பிறந்திருக்க வேண்டும்). பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) , மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் 01.07.2020 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும் 26 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும் (01.07.1994 லிருந்து 01,07,2002க்குள் பிறந்திருக்க வேண்டும்).

ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்) , பழங்குடியினர் 01.07.2020 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும், 29 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். (01.07.1991 லிருந்து 01.07.2002க்குள் பிறந்திருக்க வேண்டும்).

இத்தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணப்பதாரர்கள் இத்தேர்வுக்கான கல்வித்தகுதியான 10 ம் வகுப்பினை தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்களுக்கு இறுதி தற்காலிகத் தேர்வின் போது மட்டுமே (Final Provisional Selection) வகுப்பு வாரியாக 20 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகளின் போது 20 சதவீத முன்னுரிமை பின்பற்றப்பட மாட்டாது.

விண்ணப்பதாராரின் 10ம் வகுப்பு பள்ளி மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate), பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் பயிற்று மொழி (Medium of Instruction) “தமிழ்” என இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதிருந்தால் விண்ணப்பதாரர் 10ஆம் வகுப்பில் பயின்ற கல்வி நிறுவனத்திலிருந்து தமிழ் பயிற்று மொழியில் படித்துள்ளார் என்பதற்கான சான்றிதழைப் பெற்று இணையவழி விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கவேண்டும்.

விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பில் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழை இணைக்காமல் மேல்நிலை வகுப்பினை அல்லது பட்டப் படிப்பினை தமிழ்வழியில் கற்றதற்கான சான்றிதழை சமர்பித்தால் அச்சான்று 20 சதவீதம் முன்னுரிமை பிரிவில் ஏற்றுக்கொள்ளப்படாது.

எழுத்துத் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடைபெறும். எழுத்துத் தேர்வில் பொது அறிவு மற்றும் உளவியல் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். உடற்கூறு அளத்தல் தகுதித் தேர்வேயாகும். எனவே இதற்கு மதிப்பெண் கிடையாது. உடல் தகுதித் தேர்வுக்கும் மதிப்பெண் இல்லை. ஏனெனில் உடல் தகுதித் தேர்வு தகுதித் தேர்வேயாகும். உடல்திறன் போட்டிகளுக்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்படும். சிறப்பு மதிப்பெண்கள் 5 ஆகும். ( தேசிய மாணவர்படை சான்றிதழ் (ncc) 2 மதிப்பெண்கள், நாட்டு நலப்பணித் திட்டம் சான்றிதழ் (nss) 1 மதிப்பெண், விளையாட்டுச் சான்றிதழ் 2 மதிப்பெண்கள்).

ஆண்கள் பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 170 செமீ உயரம் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 167 செமீ உயரம் தேவை. மார்பு அளவு 81 செமீ அளவும், விரிந்த நிலையில் 86 செமீ அளவும் இருக்க வேண்டும். பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பெண்கள் 159 செமீ உயரம் தேவை. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 157 செமீ உயரம் இருக்க வேண்டும்.

ஆண்கள் 1500 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். பெண்கள் 400 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 30 வினாடிகளில் ஓடி கடக்க வேண்டும்.

tnusrb 2020: விண்ணப்பம் செய்யும் முறை:

தகுதியும், ஆர்வமும் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் tnusrbonline.org என்ற இணையதளத்தில் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26 வரை விண்ணப்பிக்கலாம். 10,906 பணியிடங்களுக்கு டிசம்பர் 13ல் எழுத்துத்தேர்வு நடக்கும். மேற்கண்ட தகவல்களை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் தெரிவித்துள்ளது.

வாசிப்பு திறன்

வாசிப்பு திறன் 

அடிப்படை தமிழ் இலக்கணம்

அடிப்படை தமிழ் இலக்கணம் 

TET TAMIL MATERIALS 

 அக்குபிரஷர் எனும் செலவில்லா மருத்துவம்

முடி கொட்டிய இடத்தில் திரும்பவும் முடி செழித்து வளர 10 நிமிட முத்திரை பயிற்சி போதும்.








        முடி உதிர்வது என்பது இன்று பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஒருவருடைய அழகை மேலும் கூட்டிக் காட்டுவது சிகை அலங்காரத்தில் தான் உள்ளது. இன்றைய தலைமுறையினருக்கு நூற்றில் என்பது பேருக்கு இந்த பிரச்சனை இருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், முக்கிய காரணமாக இருப்பது உண்ணும் உணவு மற்றும் மன அழுத்தம். பரபரப்பான உலகில் ஒரு மெஷின் போல் இயங்கிக் கொண்டிருக்கிறோம். ஓய்வு என்பதே குறைந்துவிட்டது. இதனால் உடலில் மாற்றங்கள் நிகழ்ந்து பிரச்சனையாக உருவெடுக்கிறது. முத்திரைகள் மூலம் பல பிரச்சினைகளை தீர்வுக்கு கொண்டுவர முடியும். அதில் தலைமுடி உதிர்வது தடுக்கவும், முடி கொட்டிய இடத்தில் மீண்டும் செழித்து வளரவும் இந்த பயிற்சியை செய்தால் போதுமானது. அதைப் பற்றிய விரிவான விளக்கங்கள் இப்பதிவில் காணலாம்.



நம் கை விரல்களில் பஞ்ச பூத சக்திகள் உண்டு. அவற்றில் கட்டை விரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும், நடு விரல் ஆகாயத்தையும், மோதிர விரல் நிலத்தையும், சுண்டு விரல் நீரையும் கொண்டுள்ளது. தியானம் மேற்கொள்பவர்கள் ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் இணைத்து முத்திரை நிலைக்கு வருவார்கள். இதனால் மூளை தூண்டப்பட்டு மனம் ஒருமுகப்படும். மனதை அமைதிபடுத்த தினமும் குறைந்தது 10 நிமிடமாவது தியானம் மேற்கொள்வது சிறந்த பயிற்சியாக இருக்கும்


.

உரசு முத்திரை: 

           தலை முடியை வளரச் செய்யும் செல்களை தூண்ட இந்த முத்திரையை தினமும் செய்து வரலாம். மண்டை ஓட்டில் ரத்த ஓட்டம் குறைந்து போவதே முடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கும். ஆரம்பத்திலேயே முடி உதிர்வதை சாதாரணமாக விட்டுவிடாமல் பிரச்சனையாக எடுத்து கொள்வதே நல்லது. தீவிரம் அடையும் போது தான் பலர் கவலைபட்டு கண்ட கண்ட எண்ணெயை வாங்கி உபயோகித்து பலன் இல்லாமல் தவித்து கொண்டிருக்கின்றனர். இரண்டு விரல்களிலும் இருக்கும் நகங்களை மேலே கொடுக்கபட்டுள்ள படத்தில் காட்டியவாறு உரச வேண்டும். குறைந்தது 10 நிமிடமாவது தொடர்ந்து இந்த பயிற்சியை செய்வது நல்லது. சீரான வேகத்தில் நகங்களை உரசி கொண்டிருப்பதனால் தலையில் ரத்த ஓட்டம் சீராகி இழந்த முடி வளர்ச்சியை தூண்டிவிட முடியும். இதனால் முடி உதிர்வது தடுக்கப்பட்டு இழந்த முடியை திரும்பவும் முளைக்க செய்யும். இந்த பயிற்சியை செய்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னால் மற்றும் பின்னால் எதுவும் சாப்பிடக் கூடாது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இந்த பயிற்சிக்கு உரசு முத்திரை என்று பெயர்.

அக்கு பிரஷர் முறை:   



தலை முடி உதிர்வுக்கு அக்கு பிரஷர் முறையிலும் தீர்வு காண முடியும். அக்கு பிரஷர் முறையில் கை விரல்களில் தலையின் பாகங்களை தூண்டி விடக் கூடிய பாயிண்ட்கள் உள்ளது. பத்து விரல்களிலும் உள்ள நுனிப் பகுதியை கைகளை எடுக்காமல் 14 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். விரலின் நுனிப் பகுதியின் மேல் பாகத்தில் 14 முறையும், பக்கவாட்டில் 14 முறையும் இதே போல் கைகளை எடுக்காமல் அழுத்தம் கொடுக்க வேண்டும். பத்து விரல்களிலும் தினமும் 3 முறை இது போல் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்ய வேண்டும்.

காலையில் வெறும் வயிற்றில் ஒரு முறை செய்து விட்டு, பின்னர் 2 டம்ளர் தண்ணீர் குடித்து கொள்ளவும். பிறகு உங்களுக்கு நேரம் இருக்கும் போது இரண்டு முறை செய்யவும். இவ்வாறு செய்வதால் தலை முடி வேகமாக வளரும். தொடர்ந்து இந்த பயிற்சியை செய்து கொண்டே வந்தால் நிச்சயம் நல்ல பலன் விரவில் கண் கூடாக பார்க்கலாம் என்பது பலரும் பலன் கண்ட உண்மை. பக்க விளைவுகள் ஏதும் இல்லாத சிறந்த பயிற்சிகளை செய்து நன்மை அடையுங்கள்.

இக்கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடைய மேலான கருத்துக்களை பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறேன். 

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

நீட் தேர்வு அவசியமா ?

                   நீட் தேர்வு அவசியமா ? இன்றைய சூழலில் மாணவர்களின் மேற்படிப்புக்கும் சரி வேலை வாய்ப்பிற்கும் சரி போட்டி அதிகரித்துள்ளது. இதனால் அனைவருக்கும் வாய்ப்பு கிடைப்பது கடினமாகிறது.
  மாணவர்களிடையே ஏற்படும் போட்டியை குறைப்பதற்காகவே போட்டித் தேர்வுகளை அறிமுகப் படுத்தவேண்டிய சூழல் ஆளும் அரசுகளுக்கு ஏற்படுகிறது.



 மருத்துவம் போன்ற உயர் படிப்புகளுக்கு போட்டித்தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எஞ்சினியரிங் படிப்புக்கு ஏற்கனவே ஜே.இ.இ போன்ற தேர்வு நடைமுறையில் இருந்து வருகிறது.
 ஆனால் தற்போது மருத்துவ படிப்புக்கு அறிமுகப் படுத்தியுள்ள நீட் தேர்வு தான் பேசு பொருளாக உள்ளது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை, ஜே.இ.இ போன்ற தேர்வுகள் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில்/பல்கலைக் கழகங்களில் சேர்வதுக்கு மட்டுமே நடத்தப் படுகிறது.
   ஆனால் நீட் தேர்வு இந்தியாவிலுள்ள அனைத்து மத்திய ,மாநில அரசு மற்றும் தனியரயார் பல்கலைக் கழகம் / கல்லூரியில் சேர்வதற்கு அவசியம் என மத்திய அரசு கூறியுள்ளது. 
  பிரச்சனைக்கு இதுதான் காரணம், மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் உள்ள பாடத்திட்டத்துக்கும் ,மாநில அரசு கட்டுபாட்டில் உள்ள பள்ளைகைன் பாடதிட்டத்துக்கும்  உள்ள வித்தியாசம் தான். மாநில பாட திட்டத்தில் படிக்கும் மாணவர்களை மத்திய அரசு பாட திட்டத்தில் நடத்தும் தேர்வில் வெற்றி பெற்றால்தான் மருத்துவம் பயில முடியும் என கூறுவதால் தான்.
 அதுமட்டுமில்லாமல் வேறு மாநிலத்தை சார்ந்த மாணவர்களும் பிற மாநில கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் பயில முடியும் என கூறுவதால் , அந்த குறிப்பிட்ட மாநிலத்தை சார்ந்த மாணவர்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்பதே போராட்டக்காரர்களின் வாதம்.
 அவர்களின் கருத்தில் ஞாயம் இல்லாமல் இல்லை, ஒரு குறிப்பிட்ட மாநில அரசின் நிதியை பயன்படுத்தி துவங்கப்பட்ட கல்லூரியில் வேறு மாநிலத்தை சார்ந்த மாணவர்கள் படிப்பதே.
நீட் தேர்வு முந்தைய காங்கிரஸ் அரசுதான் அறிமுகப்படுத்தியது, ஆனால் விருப்பமுள்ள மாநிலம் மட்டுமே நீட் தேர்வை எழுதலாம் என கூறியது. இதனால் பிரச்சனை இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போதைய ஆளும் பி.ஜே.பி அரசு அனைத்து மாநிலத்தை சார்ந்த மாணவர்களும் கட்டாயம் தேர்வை எழுத வேண்டும் என கூறியுள்ளது.
நீட் தேர்வு குறித்து மற்ற மாநிலங்களில் பெரிய பிரச்சனை இல்லை, ஆனால் தமிழகத்தில் மட்டுமே எதிர்ப்பு அதிகமாக உள்ளது. காரணம் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு காரணமாக பாதிக்கப்படுகிறார்கள் என எதிர்ப்பாளர்கள் கூறுகிறார்கள்.
 அவர்களின் வாதம் என்ன என்றால் தமிழக மாணவர்கள் +2 பொதுத்தேர்வில் திறம்பட படித்தே அதிக மதிப்பெண் பெறுகின்றனர், எனவே நீட் போன்ற தேர்வு தேவையில்லை என்பது அவர்களின் வாதம்.
 எது எப்படியோ? நீட் போன்ற தேர்வுகளை தவிர்க்க முடியாது. எனினும் மருத்துவப் படிப்பிற்கான தகுதித் தேர்வை மாநில அரசே நடத்த அனுமதிக்க வேண்டும் அல்லது அந்தந்த மாநில அரசின் பாடதிட்டத்தில் மத்திய அரசே நடத்த வேண்டும்.இல்லையேல் அந்தந்த மாநிலத்தை சார்ந்த மாணவர்கள் மட்டுமே அந்த மாநிலத்திற்குரிய மருத்துவக் கல்லூரியில் பயில அனுமதிக்க வேண்டும்.
 பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை நீட் தேர்வுக்கு கட்டாயப் படுத்தாமல் விருப்பமுள்ள பிள்ளைகள் மட்டுமே நீட் தேர்வு எழுதலாம். மருத்துவத்தை தவிர மற்ற படிப்புகளும் வாழ்க்கையில் முன்னேற உதவும் என தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் எடுத்து கூற வேண்டும். இதன் மூலமே மாணவர்களின் இறப்பை தடுக்க முடியும்.
 மாணவர்களின் இறப்புக்கு மத்திய , மாநில அரசுகளை மட்டும் குறை கூறாமல் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு வாழ்க்கையிலுள்ள போராட்டங்களை எடுத்துக் கூறி சமுதாயத்தில் பொருப்புள்ளவர்களாக மாற்றுவது கடமையாகும்.
                                                                                -இவன்  சத்யா
 இக்கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களின் மேலான கருத்துக்களை பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். 
 

வியாழன், 17 செப்டம்பர், 2020

இனிமேல் பணம் எடுக்க OTP அவசியம்: எஸ்.பி.ஐ புதிய அறிவிப்பு.!

         எஸ்பிஐ என்று அழைக்கப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி ஆனது தொடர்ந்து  பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்த வங்கி கொண்டுவரும் புதிய வசதிகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில்  இருக்கிறது.



ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தும் பயனர்கள் இனி ஏ.டி.எம்மில் பணம் எடுக்க ஒடிபி கண்டிப்பாக அவசியம் என அந்த வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இதுபற்றி முழுவிவரங்களையும் பார்ப்போம்.
அதவாது வாடிக்கையாளர்கள் மோசடி செய்யும் நபர்களின் வலையில் வீழாமல் இருப்பதற்காக இந்த புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளோம் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. இதன் மூலம் எஸ்பிஐ டெபிட் கார்டுகளை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் எஸ்.பி.ஐ ஏடிஎம் மையங்களில் இனி பணம் எடுக்கும் போது அவர்கள் வங்கி கணக்கோடு இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணக்கு வருகின்றன ஒடிபி-எண்ணை கொடுத்தால் மட்டுமே பணம் எடுக்க முடியும்.

              lஆனால் தற்சமயம் பத்தாயிரம் மற்றும் அதற்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு மட்டுமே இந்த ஒடிபி நடை பின்பற்றப்படும். வரும் 18-ம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அனைத்து எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் செயல்முறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே வாடிக்கையாளர்கள் இனிமேல் பணம் எடுக்க ஏ.டி.எம் மையங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக மொபைல் போனையும் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம். அதேசமயம் மொபைல் எண்ணை வங்கி கணக்கோடு இணைக்கதவர்கள் சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை அல்லது ஏ.டி.எம் மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் தற்சமயம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி தனியார் துறை வங்கிகளுக்கு இணையாக அதிரடியாக பல சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும் எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றதுஇ அதற்காக பல வசதிகளையும் தொடர்ந்து செய்து வருகிறது

அன்மையில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வங்கி ஏடிஎம்களில் பேலன்ஸ் செக் செய்யும் போதோ அல்லது மினி ஸ்டேட்மெண்ட் எடுக்கும்போதோ உங்களுக்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வர அலர்ட் செய்யப்படும் வசதி கொண்டுவரப்பட்டது.

இதன் காரணமாக எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மோசடிகளில் இருந்து தப்பிக்கவும் இது வழி வகுக்கும். ஒருவேளை உங்களது ஏடிஎம்களை வைத்து வேறு யாரேனும் பேலன்ஸ் செக் செய்தாலோ அல்லது மினி ஸ்டேட்மெண்ட் எடுத்தாலோ உடனோ உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வரும். குறிப்பாக இந்த வசதியின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நடக்க விருக்கும் மோசடிகளை தடுக்க முடியும் என்று கருதி எஸ்பிஐ வங்கி சார்பில் தெரிவிக்ககப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் உங்கள் ஏடிஎம் கார்டு தவறாக பயன்படுத்தப் போவதாக நினைத்தால், உடனடியாக ஏடிஎம்களை பிளாக் செய்ய முடியும், அதாவது முடக்க முடியும்


இளநிலை உதவியாளருக்கான அடிப்படை பயிற்சி

இளநிலை உதவியாளருக்கான அடிப்படை பயிற்சி 

புதன், 16 செப்டம்பர், 2020

புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக் கூடாது ஏன் தெரியுமா?

தமிழக பாடத்திட்டத்தில் இருந்து நீட் தேர்வில் 96 சதவீத கேள்விகள்

 சமீபத்தில் நடந்த, 'நீட்' தேர்வில்,தமிழக பாட திட்டத்தில் இருந்து, 96 சதவீத கேள்விகள் இடம் பெற்றதாக, தமிழக ஆசிரியர்கள் கண்டறிந்துள்ளனர்.

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு, செப்., 13ல், நாடு முழுவதும் நடந்தது. தேர்வில், தமிழகத்தில், ஒரு லட்சம் பேர் உட்பட, 14 லட்சம் பேர் பங்கேற்றனர்.

இந்த தேர்வில், மொத்தம், 180 வினாக்கள் இடம் பெற்றன. உயிரியலில், விலங்கியல் மற்றும் தாவரவியலில், தலா, 45 வினாக்கள்; இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா, 45 வினாக்கள் இடம் பெற்றன.

ஒவ்வொரு வினாவுக்கும், தலா நான்கு மதிப்பெண் வீதம், மொத்தம், 180 வினாக்களுக்கு, 720 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் பெரும்பாலும், மத்திய அரசின், என்.சி.இ.ஆர்.டி., என்ற, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன புத்தகத்தில் இருந்தே, கேள்விகள் இடம் பெற்றதாக, மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.



இந்த பாட திட்டத்தை, சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களே அதிகம் பின்பற்றுவதால், அவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் அதிகம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 இரண்டிலும் சேர்த்து, புதிய பாட திட்டம் அமலான பின் நடக்கும் நீட் தேர்வு என்பதால், தமிழக பாட திட்ட புத்தகங்களுடன், நீட் தேர்வு வினாக்களை ஆசிரியர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

இதில், 96 சதவீத வினாக்கள், தமிழக பாட திட்டங்களில் இருந்து இடம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. உயிரியலில் மொத்தம், 90 வினாக்களில், 87 வினாக்கள், தமிழக பாட திட்டத்தில் இருந்து இடம் பெற்றுள்ளன.

இயற்பியல் மற்றும் வேதியியலில், 45க்கு தலா, 43 வினாக்கள் இடம் பெற்றுள்ளன. மொத்தம், 180 வினாக்களில், 173 வினாக்கள் நேரடியாக தமிழக பாட திட்ட புத்தகத்தில் இருந்து இடம் பெற்றுள்ளதாக, நீட் பயிற்சி அளித்த தமிழக ஆசிரியர்கள் கண்டறிந்துள்ளனர். 

இந்த தகவல், தமிழக ஆசிரியர்களின், 'வாட்ஸ் ஆப்' குழுக்களில் பரவுகிறது.

ஆன்லைன் பாடம் புரியாமல் 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை- முதல்வரிடம் முதல் பரிசுவாங்கியவர்!

 சிவகங்கை: ஆன்லைனில் நடத்தும் பாடங்கள் புரியாததால் சிவகங்கை அருகே 10-ம் வகுப்பு மாணவி சுபிக்‌ஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் முதல் பரிசை முதல்வர் எடப்பாடியிடம் பெற்றவர் மாணவி சுபிக்‌ஷா.

தமிழகம் முழுவதும் நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்வது தொடர் கதையாகி வருகிறது. நீட் தேர்வுக்கு முன்பாக ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நீட் தேர்வு மரணங்களைப் போல ஆன்லைன் பாடங்களாலும் தற்கொலைகள் தொடருகின்றன. ஆன்லைன் பாடங்கள் புரியாத காரணத்தால் சிவகங்கை அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு இறந்திருக்கிறார்.

சிவகங்கை சுபிக்‌ஷா

சிவகங்கையை அடுத்த திருப்புவனம் செல்லப்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்ற ஆட்டோ ஓட்டுநரின் மகள் சுபிக்‌ஷா. இவர் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கொரோனா லாக்டவுன் என்பதால் அவரது பள்ளியில் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தி உள்ளனர்.

ஆனால் ஆன்லைனில் நடத்தப்படும் பாடங்களை சுபிக்‌ஷாவால் புரிந்து கொள்ள முடியாமல் தவித்து வந்துள்ளார். இதில் கடுமையான மன உளைச்சலுக்குள்ளானார் சுபிக்‌ஷா. இப்படியே நீடித்தால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண்கள் குறைந்துவிடும் எனவும் சுபிக்‌ஷா கவலைப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில்தான் திங்கள்கிழமை இரவு மாணவி சுபிக்‌ஷா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2017-ல் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் போது மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகளில் முதலிடம் பெற்றவர் சுபிக்‌ஷா. இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பரிசும் பெற்றிருந்தார் சுபிக்‌ஷா.

சுபிக்‌ஷா போன்ற மாணவர்களால் ஆன்லைன் பாடங்களை எளிதாக புரிந்து கொள்ள முடியவில்லை. இது மாணவர்களைத் தற்கொலைக்கு தூண்டுகிறது. இதனால் இந்த ஆன்லைன் கல்வி முறையையே ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்களும் கல்வியாளர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

ஜே.இ.இ தேர்வில் வெற்றி; அசத்திய அரசு பள்ளி மாணவி தேர்ச்சி - குவியும் பாராட்டுக்கள்.!

 

ஜே.இ.இ தேர்வில் வெற்றி பெற்று அசத்திய திருப்பூரை சேர்ந்த அரசு பள்ளி மாணவி. குவியும் பாராட்டுக்கள்.

என்.ஐ.டி., ஐ.ஐ.டி.,யில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கு ஜே.இ.இ. என்கிற இணை நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வை எழுதிய திருப்பூர், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த சௌந்தர்யா என்கிற மாணவி ஜே.இ.இ தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் மெயின் தேர்வில் 77.9 சதவீத மதிப்பெண்களை பெற்று அசத்தி உள்ளார்.

திருப்பூர் மாவட்ட அளவில் அரசுப்பள்ளியில் படித்து ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரே மாணவி என்கிற பெருமையை சௌந்தர்யா பிடித்துள்ளார். இதைப்பற்றி மாணவி சௌந்தர்யா கூறியது; நான் பாடங்களை மனப்பாடம் செய்யாமல் புரிந்துகொண்டு படிப்பேன்.

நான் ஜேஇஇ தேர்வுக்கான பாடங்களைப் படிப்பதற்கு தனியாக பயிற்சி மையத்தில் சேரவில்லை.

நான் வகுப்புகளில் படிப்பதோடு சரி. எனக்கு சிறப்பாக ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்தனர். நான் பன்னிரண்டாம் வகுப்பில் 427 மதிப்பெண்கள் பெற்று உள்ளேன். ஐஐடியில் சேர்ந்து மென்பொருள் பிரிவில் படித்து அதில் சாதிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. இதனால் நுழைய தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளேன். எனது அப்பா வெள்ளிங்கிரி, கார்பென்டர். அம்மா சரஸ்வதி, இல்லத்தரசி

தமிழகத்தில் முதன்முறையாக டூ வீலர்கள் செல்வதற்காக தனி டிராக்! செயல்பாட்டுக்கு வந்தது!

 தமிழகத்தில் முதன்முறையாக இருசக்கரவாகனங்கள் செல்வதற்காக தனி டிராக் – பரீட்சார்த்தமுறையில் செயல்பாட்டுக்கு வந்தது.

தமிழகத்தின் மத்திய பகுதியாக விளங்கும் திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் இருசக்கர வாகன விபத்துக்கள் அதிகரிக்கும் பட்சத்தில் இருசக்கர வாகனங்கள் மட்டும் தனியே பயணிக்கும் வகையில் தமிழகத்தில் முதன்முறையாக ட்ராக் ஏற்படுத்தப்படும் என்று மாநகர காவல் ஆணையர் லோகநாதன் கடந்த ஆகஸ்ட்-7ம் தேதியன்று அறிவித்திருந்தார்.

அதன்படி திருச்சி மாநகரில் 3, 4 சாலைகளில் இது முதலில் அமைக்கும் பணி நடைபெறுவதாக தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக திருச்சி தலைமைத் தபால்நிலையம் முதல் நீதிமன்றம் வரையிலான சாலையில் இடதுபுறமாக இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்லும் வகையில் மஞ்சள் – வெள்ளைநிற கோடுகள் வரையப்பட்டு அதனுள் இருசக்கர வாகனங்கள் பயணிக்கவும் போக்குவரத்துக் காவலர்களால் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு அந்த டிராக் வழிகாக தற்போது இருசக்கர வாகனங்கள் சென்றுவருகின்றன

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு படிவம் 2024-25

  1-3 மற்றும் 4-5 வகுப்புகளுக்கான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு படிவம் xls மற்றும் pdf

 
Blogger Templates