Fact Check - 18 மாதம் கோவிட் கால அகவிலைப்படி (DA) நிலுவை மற்றும் விழா முன்பணம் ஆண்டுக்கு 30,000 ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் என பகிரப்படும் செய்தியின் உண்மைத் தன்மை என்ன?
What is the genuineness of the news being shared that the central government has approved Rs 30,000 festival advance per annum and 18 months of Covid-19 period Dearness Allowance (DA) arrears?
இரண்டு முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
1. இந்தியாவின் நிதி நிலைமை திருப்திகரமான நிலைக்கு திரும்பியிருப்பதால் கோவிட் 19 (கொரோனா ) காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 மாத கால அகவிலைப்படி (DA) வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
2. அரசு ஊழியர்களுக்கு வழங்கும் விழா முன்பணம் ஆண்டுக்கு 30,000 ரூபாயாக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேற்கண்டவாறு சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்தியின் உண்மைத் தன்மை என்ன?
கீழ்கண்ட கடிதத்தின் அடிப்படையிலேயே மேலேயுள்ள தகவல் பகிரப்பட்டு வருகிறது
விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்
மேற்காணும் கடிதம் மத்திய அரசு பணியாளர்களுக்கான சங்கத்தின் சார்பில் மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களுக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை கடிதமே தவிர, மத்திய அரசின் ஒப்புதல் அல்ல.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
தகவல்களைப் பகிரும் முன் அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளுங்கள்.
0 comments:
கருத்துரையிடுக