நீட் தேர்வு அவசியமா ? இன்றைய சூழலில் மாணவர்களின் மேற்படிப்புக்கும் சரி வேலை வாய்ப்பிற்கும் சரி போட்டி அதிகரித்துள்ளது. இதனால் அனைவருக்கும் வாய்ப்பு கிடைப்பது கடினமாகிறது.
மாணவர்களிடையே ஏற்படும் போட்டியை குறைப்பதற்காகவே போட்டித் தேர்வுகளை அறிமுகப் படுத்தவேண்டிய சூழல் ஆளும் அரசுகளுக்கு ஏற்படுகிறது.
மருத்துவம் போன்ற உயர் படிப்புகளுக்கு போட்டித்தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எஞ்சினியரிங் படிப்புக்கு ஏற்கனவே ஜே.இ.இ போன்ற தேர்வு நடைமுறையில் இருந்து வருகிறது.
ஆனால் தற்போது மருத்துவ படிப்புக்கு அறிமுகப் படுத்தியுள்ள நீட் தேர்வு தான் பேசு பொருளாக உள்ளது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை, ஜே.இ.இ போன்ற தேர்வுகள் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில்/பல்கலைக் கழகங்களில் சேர்வதுக்கு மட்டுமே நடத்தப் படுகிறது.
ஆனால் நீட் தேர்வு இந்தியாவிலுள்ள அனைத்து மத்திய ,மாநில அரசு மற்றும் தனியரயார் பல்கலைக் கழகம் / கல்லூரியில் சேர்வதற்கு அவசியம் என மத்திய அரசு கூறியுள்ளது.
பிரச்சனைக்கு இதுதான் காரணம், மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் உள்ள பாடத்திட்டத்துக்கும் ,மாநில அரசு கட்டுபாட்டில் உள்ள பள்ளைகைன் பாடதிட்டத்துக்கும் உள்ள வித்தியாசம் தான். மாநில பாட திட்டத்தில் படிக்கும் மாணவர்களை மத்திய அரசு பாட திட்டத்தில் நடத்தும் தேர்வில் வெற்றி பெற்றால்தான் மருத்துவம் பயில முடியும் என கூறுவதால் தான்.
அதுமட்டுமில்லாமல் வேறு மாநிலத்தை சார்ந்த மாணவர்களும் பிற மாநில கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் பயில முடியும் என கூறுவதால் , அந்த குறிப்பிட்ட மாநிலத்தை சார்ந்த மாணவர்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்பதே போராட்டக்காரர்களின் வாதம்.
அவர்களின் கருத்தில் ஞாயம் இல்லாமல் இல்லை, ஒரு குறிப்பிட்ட மாநில அரசின் நிதியை பயன்படுத்தி துவங்கப்பட்ட கல்லூரியில் வேறு மாநிலத்தை சார்ந்த மாணவர்கள் படிப்பதே.
நீட் தேர்வு முந்தைய காங்கிரஸ் அரசுதான் அறிமுகப்படுத்தியது, ஆனால் விருப்பமுள்ள மாநிலம் மட்டுமே நீட் தேர்வை எழுதலாம் என கூறியது. இதனால் பிரச்சனை இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போதைய ஆளும் பி.ஜே.பி அரசு அனைத்து மாநிலத்தை சார்ந்த மாணவர்களும் கட்டாயம் தேர்வை எழுத வேண்டும் என கூறியுள்ளது.
நீட் தேர்வு குறித்து மற்ற மாநிலங்களில் பெரிய பிரச்சனை இல்லை, ஆனால் தமிழகத்தில் மட்டுமே எதிர்ப்பு அதிகமாக உள்ளது. காரணம் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு காரணமாக பாதிக்கப்படுகிறார்கள் என எதிர்ப்பாளர்கள் கூறுகிறார்கள்.
அவர்களின் வாதம் என்ன என்றால் தமிழக மாணவர்கள் +2 பொதுத்தேர்வில் திறம்பட படித்தே அதிக மதிப்பெண் பெறுகின்றனர், எனவே நீட் போன்ற தேர்வு தேவையில்லை என்பது அவர்களின் வாதம்.
எது எப்படியோ? நீட் போன்ற தேர்வுகளை தவிர்க்க முடியாது. எனினும் மருத்துவப் படிப்பிற்கான தகுதித் தேர்வை மாநில அரசே நடத்த அனுமதிக்க வேண்டும் அல்லது அந்தந்த மாநில அரசின் பாடதிட்டத்தில் மத்திய அரசே நடத்த வேண்டும்.இல்லையேல் அந்தந்த மாநிலத்தை சார்ந்த மாணவர்கள் மட்டுமே அந்த மாநிலத்திற்குரிய மருத்துவக் கல்லூரியில் பயில அனுமதிக்க வேண்டும்.
பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை நீட் தேர்வுக்கு கட்டாயப் படுத்தாமல் விருப்பமுள்ள பிள்ளைகள் மட்டுமே நீட் தேர்வு எழுதலாம். மருத்துவத்தை தவிர மற்ற படிப்புகளும் வாழ்க்கையில் முன்னேற உதவும் என தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் எடுத்து கூற வேண்டும். இதன் மூலமே மாணவர்களின் இறப்பை தடுக்க முடியும்.
மாணவர்களின் இறப்புக்கு மத்திய , மாநில அரசுகளை மட்டும் குறை கூறாமல் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு வாழ்க்கையிலுள்ள போராட்டங்களை எடுத்துக் கூறி சமுதாயத்தில் பொருப்புள்ளவர்களாக மாற்றுவது கடமையாகும்.
-இவன் சத்யா
இக்கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களின் மேலான கருத்துக்களை பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
1 comments:
Super
கருத்துரையிடுக