ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உட்கூறுகளில் ஒன்றான உள்ளடக்கிய கல்வி சார்ந்த இப்பயிற்சியானது மாநிலம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு (1 முதல் 12 ஆம் வகுப்பு வரை) இணைய வழி வாயிலாக வழங்கப்படுகிறது.
அ. பயிற்சியின் நோக்கங்கள்
ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் அனைத்து நிலை ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறையில் உள்ள மாணவர்களிடம் உடல்நலம் சார்ந்த மதிப்பீடு (Health Screening) மேற்கொள்ளும் போது மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை அடையாளம் காண்பதற்கும், அவர்கள் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளாக இருப்பின், சார்ந்த சிறப்பு பயிற்றுநர்களுடன் அவர்களுக்கேற்ற வகுப்பறை சூழல்களை மாற்றி அமைத்து உள்ளடக்கிய கல்வியை மேலும் வலுப்படுத்துவதே இப்பயிற்சியின் நோக்கமாகும்.
மேலும் இந்த பயிற்சியானது மாற்றுத்திறனாளிகளின் உரிமைச் சட்டம் 2016 மற்றும் அதில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 21 வகையான குறைபாடுகள்,அவர்களின் உரிமைகள் மற்றும் தேவைகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளவும், குறைபாடுகளை பொருட்படுத்தாது அவர்களின் திறன்களின் மீது நம்பிக்கை வைத்து பள்ளியில் உகந்த சூழலை அமைத்து தருவதற்கும் வழிவகை செய்கிறது.
ஆ. பயிற்சியின் சிறப்பம்சங்கள்
இதில் 7 கட்டகங்கள் (Modules) உள்ளன.ஒவ்வொரு கட்டகமும் முறையே,
1. முன்- திறனறி மதிப்பீடு(Baseline Assessment)
2. பயிற்சிக் காணொலி(Training Video)
3. பயிற்சிக் கையேடு(Training Material)
4. பின்-திறனறி மதிப்பீடு(Endline Assessment) என்ற துணை தலைப்புகளுடன் வரிசையில் அமையப்பெற்றிருக்கும்.
அனைத்து ஆசிரியர்களும் ஒவ்வொரு கட்டகத்தின் தொடக்கத்திலும், இறுதியிலும் சார்ந்த திறனறி வினாக்கள் (Baseline and Endline Assessment) மூலமாக மதிப்பீட்டில் பங்கேற்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயிற்சியின் வழிமுறைகள்:
STEP 1:GO TO EMIS WEBSITE
STEP 2: LOGIN YOUR PERSONAL I'D AND PASSWORD
STEP 3: DROP DOWN PROFILE BUTTON
STEP 4: GO TO LMS
பயிற்சியில் உள்ள ஏழு கட்டகத்தையும் முடித்து பயிற்சி தொடர்பான கருத்துக்களை பதிவிடவும்.
பின் உங்களுடைய கணக்கிலிருந்து லாக் அவுட் செய்து மீண்டும் லாகின் செய்தால் உங்களுடைய பயிற்சி 100% நிறைவடைந்து விட்டது என்ற தகவல் உங்களுக்கு காண்பிக்கும்.
பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் ஒரு சில நாட்களுக்குப் பின் வெளியிடப்படலாம்.
0 comments:
கருத்துரையிடுக